Oct 15, 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மைலாப்பூர் கிளை உதயம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியத்தில் உறுதி சமூகத்தில் நல்லிணக்கம் மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம், அரசு மருத்துவமனைகளில் அழைப்புப்பணி போன்ற பல்வேறு பணிகளின் மூலம் கவரப்பட்டு கொள்கை சகோதரர்கள் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
 அந்த வகையில் தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் பகுதியில் சமிபத்தில் இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத் ' மாமறை அழைக்கிறது ' நிகழ்ச்சியை நடத்தியது. அதன் விளைவால் அப்பகுதி சகோதர்கள் அங்கு கிளை அமைக்க ஏற்பாடு செய்து அதற்கான ஆலோசனைக் கூட்டம் 13.10.12 சனி இரவு நடை பெற்றது. 
தாயகம் வந்துள்ள குவைத மண்டல் செயலாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் செங்கிஸ் கான், இனாயத்துல்லாஹ், மாவட்ட நிர்வாகிகள் , பயாஸ், சிக்கந்தர், கலீல் ரஹ்மான், ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டதோடு அப்பகுதியில் தஃ வாவை மேமடுத்துவது, வாரந்தோறும் தர்பியா வகுப்புகளை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 
அல்ஹம்து லில்லாஹ்.

No comments: