Nov 29, 2012

தமிழக முதல்வரிடம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் கோரிக்கைகள்!

நேற்றைய தினம் தமிழக முதல்வரை தூப்பாக்கி திரைப்பட விஷயமாக சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர், அவரிடம் என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டன என்பதை தமுமுகவின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற மமக உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விளக்குகிறார்.


விண்டிவியில் எதிரும் புதிரும்!



Nov 28, 2012

கோவை சிறைவாசி சகோதரர் அபூதாஹீரை மீட்கும் நீதிக்கான போராட்டம்!

இன்ஷா அல்லாஹ் வரும் நவம்பர் 30ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, மமக, தேசியலீக், SDPI, PFI, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று கூடி உயிருக்கு போராடும் அப்பாவி சிறைவாசி அபூதாஹிரின் விடுதலைக்கான போராட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.

அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறது.....

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

இஸ்லாமிய விரோத காட்சிகளை நீக்க உதவி செய்த முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நன்றி!


இந்தியாவில் நீதி இன்னும் செத்து விடவில்லை!


சமீபத்தில் உயிர் இழந்த பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காவும் இரு இளம் பெண்களைக் கைது செய்த விசயம் அனைவரும் அறிந்ததே.

Nov 27, 2012

கீழக்கரையில் பிடிப்பட்ட போலி மந்திரவாதியை குண்டர் சட்டத்தில் அடைக்க இதஜ கோரிக்கை!

பெண்க‌ளிட‌ம் ஆபாச‌மாக‌ பேசுத‌ல், ஏமாற்றுத‌ல் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு குற்ற‌சாட்டுக‌ளை தொட‌ர்ந்து தமிழ்நாடு த‌‌வ்ஹீத் ஜ‌மாத் சார்பில் காவ‌ல்துறையில் கொடுத்த‌ புகாரில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ போலி ம‌ந்திர‌வாதி பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் (40) ஜாமீன் பெற்று விடுத‌லையாவ‌த‌ற்கு முய‌ற்சிக‌ளை தொட‌ர்ந்து வ‌ருவ‌தாக‌  செய்திக‌ள் வெளியாகியுள்ள‌து.மேலும் ஆன்மீக‌த்தின் பெய‌ரில் ப‌ல்வேறு ஆபாச‌ங்க‌ளிலும், மோச‌டிக‌ளிலும் ஈடுப‌ட்டதாக‌ கூற‌ப்ப‌டும் இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் கைது செய்ய‌ வேண்டும் என‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

Nov 22, 2012

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம் ஒப்பந்தமானது!


கடந்த 8 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கடும் தாக்குத்தலால் பாலஸ்தீன காஸாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.
 
இஸ்ரேலின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆஷூரா நோன்பு

ஆஷுரா நோன்பு ரமதான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1962)

ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் (அபூகதாதா(ரலி) முஸ்லிம் 1977)

அதன் அடிப்படையில் முஹர்ரம் மாத்தின் 9,10 நாட்களாக உள்ள நவம்பர் 23.11.2012 மற்றும் 24.11.2012 (வெள்ளி மற்றும் சனி கிழமை) ஆகியதினங்களில் வளைகுடா நாடுகளில் இரண்டு நாட்கள் நோன்பு நோற்க்க வேண்டும்.

"காஸ்ஸாவுக்கு ராணுவ உதவி அளிக்கவேண்டும்! – ஈரான் சபாநாயகர்!


இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுமாறு ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லாரிஜானி அரபு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Nov 20, 2012

இஸ்ரேலுக்கு எதிராக பொங்கும் அரபு மக்கள்!

பயங்கரவாத இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி பச்சிளம் குழந்தை முதல் வயது போன முதியவர்கள் வரை சுமார் 150 உயிர்களை கொலை செய்து, 1000க்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவதியுறுவதை கண்டு பொறுக்க முடியாமல் அரபு தேசத்து மக்கள் வேதனைப்படுகின்றனர்.

Nov 19, 2012

இதஜ தலைமையகத்தில் வாராந்திர நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பில் வாராந்திற சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் சனிக் கிழமை முதல் நடை பெற்று வருகிறது.  நம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரையாற்றிய இந்த சொற்பொழிவில் வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த ராயபுரம் செவன்வேல்ஸ் துறைமுகம் கிளைகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அல்ஹ்ம்து லில்லாஹ்!

மதுரை மாவட்டத்தில் என்.எஸ்.கே.நகர் INTJ கிளை உதயம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் அதில் தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் என்.எஸ்.கே.நகரில் புதிய கிளை துவங்கப்பட்டு அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர.இதில் முஸ்தாக் உள்ளிட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

விடுதலை சிறுத்தைகளின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!

அல்லாஹ்வின் இறுதி வேதம் எல்லோருக்கும் எத்தி வைக்கப்பட வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் செயல்படும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தூத்துக்குடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநகர செயலாளராக இருக்கும் முஸ்லிமல்லாத சகோதரருக்கு திருமறைத் தமிழாக்கத்தை வழங்கிய போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வழக்கறிஞர் அணி செயலாளர் இம்ரான் மக்கள் ரிபோர்ட் ஆசிரியர் அபு பைசல் ,முகவை அப்பாஸ், எஸ்.எம்.பாக்கர் ஆகியோர்.

INTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்!

தனது தனித்துவமான தஃவா பணிகளின் மூலம் ஏராளமான் மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் கடந்த வெள்ளியன்று இரண்டு இளைஞர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ் வியலாக ஏற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு எஸ்.எம்.பாக்கர் அவர்கள் திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்தத்தோடு அவர்களுக்கு முஹம்மத் தாஹா, ஆஷிக் அஹமது எனப் பெயரும் சூட்டினார். அல்ஹம்து லில்லாஹ். .

Nov 17, 2012

அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள் : "CBSC" பாட புத்தகத்தில் விஷமம்! நீக்கவில்லை என்றால் போராட்டம்.INTJ!

பைத்துல் முகத்தஸ் இமாமுக்கு விசா மறுத்தது இந்தியா.............!! காவி அரசாக மாறியது காங்கிரஸ் அரசு............!!

முஸ்லிம்களின் எதிர்ப்பை மீறி, இஸ்ரேலுடன் உறவை வைத்துள்ள இந்திய அரசு நேற்று இந்தியா வரவிருந்த பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் இமாம் ஷேக் ஷியாம் அவர்களுக்கு விசா வழங்க மறுத்து விட்டது.

துப்பாக்கி படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டோம்: தயாரிப்பாளர் தாணு பேட்டி!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வாயில் அருகே செய்தியாளர்களிடம் பேசிய கலைப்பு- தாணு, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர், துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் மனதை துன்புறுத்து விதமாகவும், வருந்ததக்க விதமாகவும் சில காட்சிகள் இருப்பதாக தெரிவித்தனர். 
இதனை தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட அந்த காட்சிகளை சென்சார் மூலம் நீக்கிவிட்டு அந்த சென்சார் குழுவிடமும் காண்பிக்கப்பட்டது. இதனை தெரிவிப்பதற்காக கமிஷனர் அலுவலத்துக்கு வந்தோம். நீக்கப்பட்ட காட்சிகள் போக உள்ள படத்தின் சிடியை சம்மந்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளிடம் வழங்க உள்ளோம் என்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!  
-அல் அமீன்.
 
 

சென்னையில் இரத்தத் தான முகாம்!

இன்ஷா அல்லாஹ் வரும் 18-11-2012 ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கத்தில் இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை அழைக்கிறது......

இஸ்ரேலுடனான அனைத்து உறவையும் துருக்கி துண்டித்தது!


யூத ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், தீர்வுகளைக் குறித்து ஆராயவும் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும் தொலை பேசியில் விவாதித்தனர்.

இதஜவின் செங்குன்றம் மர்கஸுக்கு சொந்த இடம்!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், நாராவரிகுப்பம் பகுதியில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொழுவதற்காக மர்கஸ் ஒன்றை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய் முன்பணமாக தரப்பட்டது.



இந்த பணத்தை தேசியத் தலைவர் S.M. பாக்கர் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் பொது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலப் பேச்சாளர்கள் வேலூர் இப்ராஹீம் அலீம் அழ புஹாரி மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தீவிரவாத மார்க்கமல்ல இஸ்லாம் திருக் குரானை படியுங்கள்! விஜய் தந்தை எஸ்.எ.சந்திரசேகருக்கு ஐ.என்.டி.ஜே. வழங்கியது!

மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் மகத்தான முழக்கத்துடன் மாற்று மத மக்களுக்கு இறை வேதத்தை இலவசமாக வழங்கி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நேற்று சர்ச்சைக்குரிய துப்பாக்கி படம் குறித்த
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தப் படக் குழுவினருக்கு திருமறை தமிழாக்கம் வழங்கியது.

இஸ்லாத்தை ஏற்றவருக்கு வாழ்வாதார உதவி!

சூளைமேடு அல்புர்கானில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஜுமுஆ வசூல் 3500 வழங்கப்பட்டது.

 

அருகில் தப்ரேஸ் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகி ஷம்ஸுதீன்

பயங்கரவாத இஸ்ரேல் தாக்குதலுக்கு எகிப்து கடும் கண்டனம்!


Nov 16, 2012

முஸ்லிம்களிடம் துப்பாக்கி குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்!

நடிகர் விஜய் நடித்து கடந்த நவம்பர் 13 ஆம்தேதி வெளியான தூப்பாக்கி எனும் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவரவாதிகளை போல் மிக மோசமாக காட்டியுள்ளதை கண்டு இஸ்லாமிய சமுதாயமே கொதித்து எழுந்தது.

கோவையில் அமைதிக்குழு கூட்டம்! இதஜ பங்கேற்பு!

கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. 

Nov 13, 2012

சென்னை சேப்பாக்கம் கிளையில் இரத்தத் தானம்!

இன்ஷா அல்லாஹ் வரும் 18.11.12 அன்று சென்னை சேப்பாக்கம் கிளை சார்பாக மாபெரும் இரத்தத்தானம் முகாம் இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கிறது.


Nov 12, 2012

நலம் பெற வேண்டுகிறோம்!

அரசு மருத்துவமனைகளில் அல்லலுற்று நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு அண்ணலாரின் வழியில் ஆறுதலாய் தலை வருடி அவர்களுக்காக பிரார்த்திக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு இஸ்லாம் குறித்த பல பிரசுரங்களை வழங்கி தஃவா செய்கிறது.அதில் ஒரு பிரசுரம்.

Nov 6, 2012

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக குர்பான் கறி விநியோகம்!

இராமநாதபுரம் மாவட்டம் INTJ சார்பில் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. குர்பான் கறி விநியோகம் செய்யும் பணியின் போது மாவட்ட தலைவர் முஸம்மில்ஹார் மற்றும் மாநில செயலாளர் ஃபிர்தவ்ஸ் உடன் கீழக்கரை நகர் நிர்வாகிகள்.

Nov 1, 2012

இதஜ திருப்பூர் கிளையின் ஐம் பெரும் நிகழ்ச்சி!

விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 04.11.2012 ஞாயிறு அன்று ஐம் பெரும் நிகழ்ச்சி (சகோதர சமுதாயத்திற்கு அல்குர்ஆன் வழங்கல், மருத்துவ முகாம், மாவட்ட அலுவலகம் திறப்பு, இணையதளம் வெளியீடு, கொடியேற்றி பெயர் பலகை திறப்பு) நடைபெற இருக்கிறது.

அந்நிகழ்ச்சிகளில் நம் அனைவரும் கலந்து கொள்ள அன்பொழுக அழைக்கிறது......நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் நகர் கிளை.


பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மர்யம் ஜமீலா வஃபாத்தானார்!


"வழக்கில் இருந்து விடுவிக்க காஸ்மி மனு!

காஸிமி.

இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மது காஸ்மி, தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

"வங்காள விரிகுடாவில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் சென்ற படகு மூழ்கியது! – 122 பேரை காணவில்லை!