Nov 16, 2012

முஸ்லிம்களிடம் துப்பாக்கி குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்!

நடிகர் விஜய் நடித்து கடந்த நவம்பர் 13 ஆம்தேதி வெளியான தூப்பாக்கி எனும் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவரவாதிகளை போல் மிக மோசமாக காட்டியுள்ளதை கண்டு இஸ்லாமிய சமுதாயமே கொதித்து எழுந்தது.


இது குறித்து தூப்பாக்கி குழுவினருடன் தமுமுக, இதஜ, SDPI, PFI,  தேசியலீக், மறுமலர்ச்சி மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்து தங்களது வேதனை தெரிவித்தது.


அதில் ஒருபகுதியாக நேற்று (15.11.2012) விஜய்யின் வீட்டை  இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துர் ரஹீம் தலைமையில் முற்றுகை இட்டது.

இதனை உணர்ந்த தூப்பாக்கி குழுவினர் இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பகிரங்க மன்னிப்பு கேட்டனர். அதனுடைய வீடியோ காட்சியினை இங்கே சென்று காணவும்




No comments: