Dec 25, 2012

ஆவடி இதஜ சார்பில் தர்பியா முகாம்!

இதஜ வில் இணைந்த இளைஞர்கள்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் எண்ணற்ற தஃவா பணிகள், தன்னலம் பாராத சமுதாய பணிகள், வீரிய மிக்க போராட்டங்கள் மற்றும் பாதிக்க பட்ட மக்கள் யாராக இருந்தாலும், எந்த அமைப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஓடோடிச் சென்று களப்பணியாற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற மக்களின் ஆதரவு பெற்ற முதன்மை அமைப்பாக அல்லாஹ்வின் உதவியால் INTJ விளங்குகிறது.

தர்பியாவை தொடர்ந்து தெருமுனை நடத்திய INTJ!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி நகர கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாபெரும் தர்பியா முகாமை தொடர்ந்து மாலை மாபெரும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.

ததஜ சகோதரர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தது இதஜ!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக டிசம்பர்-21ல் உலகம் அழியாது என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு எதுராக இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டுகின்றனர்` TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டீஸ் வெளியிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கி செயல்பட்டனர்.

எளிமையான தஃவா களத்தில் குன்றத்தூர் இதஜ!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்த படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மாத்திரமே மார்க்கத்தை சொல்லி தஃவா பணிகளை செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி எளிமையான முறையுலும், என்றும் தொடரும் வகையிலும் பல வழிமுறைகளில் தஃவா பணிகளை செய்து காட்டி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே!

இஸ்லாமிய அழைப்புப் பணியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

தாஃவா களத்தில் தனி முத்திரையுடன் விளங்கும் இந்தியதவ்ஹித் ஜமாஅத் பல சகோதர சமுதயாதினரை மாபெரும் அல்லாஹ்வின் கிருபையால் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகிறது.

Dec 20, 2012

INTJ வில் இணைந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்!

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகளால் ஈர்க்கப்பட்ட பல சகோதர, சகோதரிகள் தினசரி இந்த ஜமாத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். 

 INTJ தலைமையகத்திற்கு INTJ வழக்கறிஞர் அணி செயலாளர் இம்ரான் B.A.B.L. அவர்களுடன் வருகை புரிந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யாஸீன் B.COM,B.L. அவர்கள் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர் முன்னிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்தார்.  அல்ஹம்துலில்லாஹ்!

Dec 19, 2012

RSS பத்திரிக்கை ஆசிரியருக்கு அல்குர்ஆன் அன்பளிப்பு!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொடங்கிய காலம் தொட்டு மாமறை குர்ஆனை மக்களிடம் சேர்க்கும் மகத்தான பணியை செவ்வனே செய்துவருகிறது. இதுவரை முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட குர்ஆனை முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரிசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் முற்றும் (ஆ)சாமியார்கள் முதல் சாமானியர்கள் வரை அணைத்து தரப்பட்ட முஸ்லிமல்லாத மக்களிடமும் கொண்டு சேர்த்து இருக்கிறது. நேற்று rss அதிகாரப்பூர்வ பத்திரிகையான விஜய பாரதத்தின் ஆசிரியர் வீர பாகு அவர்களுக்கு INTJ தலைவர் S.M. பாக்கர் திருமறை குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்.

Dec 17, 2012

சையது இக்பால் பொதுச் செயலாளராக தேர்வு!

இந்திய தவ்ஹீத்தின் பொதுச் செயலாளராக இருந்த செங்கிஸ்கான், பிறை சம்பந்தமான விஷயத்தில் தனது பதவியை கடந்த 09.12.2012 அன்று ராஜினாமா செய்வதால், துணைப் பொதுச் செயலாளராக இருந்த சையது இக்பால், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அநாதைகளான பிணங்களை இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்யும் இதஜ!

சென்னையில் அர்ரஹ்மான் பைத்துல்மால் 3 ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி!

சென்னை சூளைமேடு அல்புர்கான் மர்கஸில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அர்ரஹ்மான் பைத்துல்மால் 3 ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் ஆரம்ப உரை நிகழ்த்திய தமுமுக தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹம்மது அவர்கள் அர்ரஹ்மான் பைத்துல்மால் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்.

சபரிமலை செல்லும் இந்து பக்தர்களுக்கு சத்தியத்தை நோக்கி அழைக்கும் இதஜ ஆவடி கிளை!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

Dec 15, 2012

கோவை சிறைவாசி அபூதாஹிர் விடுதலைக்காக இதஜவின் கண்டன போஸ்டர்!

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி கடும் நோயால் உயிருக்கு போராடும் சகோதரர் அபூதாஹிரை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கோரியும்,   மதுரை மாவட்ட த மு மு க நிருவாகிகளை தாக்கிய எடி எஸ் பி மயில் வாகனை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக போஸ்டர் அடித்து திருப்பூர் முழுவதும் ஓட்ட பட்டுள்ளது.


Dec 14, 2012

என் தொப்புள் கொடி உறவுகளே! தேவேந்திர மக்களை அழைத்த பாக்கர்! நெகிழ்ச்சியில் ஜான் பாண்டியன்!

கடந்த 13ந் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்,முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் அக்கட்சியின் சார்பில் திருப்புமுனை என்கிற மாத இதழ் துவக்க நிகழ்ச்சியும் இடம் பெற்றது.திருப்புமுனையை வரவேற்கிறேன். இது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக மட்டும் இல்லாமல்.கட்சிப்பத்திரிகை என்ற நிலையையும் தாண்டி பரந்து பட்ட களத்தில் அது இயங்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் சகோ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு வைக்கிறேன்.

இராமநாதபுரத்தில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

இராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களுக்கு சேதம் ஏற்படுத்தி வரும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டி, இன்ஷா அல்லாஹ் வரும் 15.12.2012 அன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு அனைத்து அமைப்புகளின் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.


Dec 11, 2012

கோவை சிறைவாசி அபூதாஹிரின் விடுதலைக்காக அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து (12.12.2012) சென்னையில் நடத்தும் மாபெரும் தர்ணா போராட்டம்!

அனைரையும் அழைக்கிறது...........
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

நீரிழிவுக்கு சிறந்த மருந்து கறிவேப்பிலை !!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Dec 8, 2012

பட்டுக் கோட்டையில் இதஜவின் ஆர்ப்பாட்டம்!


பட்டுக்கோட்டையில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் நடத்திய டிசம்பர் 6 ஆர்பாட்டத்தில் ஒரு பகுதி

உயிருக்கு போராடும் சிறைவாசியை இதஜ து.பொதுச் செயலாளர் நேரில் கண்டு ஆறுதல்!


கடந்த டிஸம்பர் 6 அன்று, பாப்ரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்தும், இடித்தவர்களை கைது செய்யக் கோரியும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் தமிழகமெங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வீரியமான போராட்டங்கள் நடத்தப் பட்டன. ஐஎன்.டி.ஜே.வின் மாநில நிர்வாகிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆர்பாட்டத்திற்கு தலைமை ஏற்றனர்.

திருப்பூரில் டிஸம்பர் 6 முற்றுகை! இதஜ சகோதரர்கள் கைது!

சென்ற டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித்தை திரும்ப பெற கோரி தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜான் பாண்டியனுக்கு இதஜ சார்பாக திருக்குர்ஆன் அன்பளிப்பு!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் S.M. பாக்கரைஅலுவலகத்தில் சந்தித்து பேசினார்.


Dec 7, 2012

பாபரி மஸ்ஜித் விஷயமாக கேப்டன் டிவியில் S.M.பாக்கர் ஆக்ரோஷமான விவாதம்!

 

 

கேப்டன் டிவியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சரியா? தவறா? இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பாக்கரின் ஆக்ரோஷமான விவாதம்!


Dec 6, 2012

குற்றம் நிரூபிக்கப்படாமல் 51,206 முஸ்லிம்கள் ஜெயிலில் உள்ளனர் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்................!!


டிசம்பர் வரை "நேஷ்னல் கிரைம் ரெக்கார்டு பீரோ" கணக்கீட்டின்படி, நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 51,206 முஸ்லிம்கள் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Dec 5, 2012

இதஜ சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (06-12-2012) ஆர்ப்பாட்டம்! முஹம்மது முனீர் அறிவிப்பு!

ஏக இறைவனின் வழிப்பாட்டு தலமான பாபரி மஸ்ஜித் காவி தீவரவாதிகளால் தகர்க்கப்பட்டு 20 வருடங்கள் ஆகின்றன. இஸ்லாமிய சமூகத்திற்கு சொந்தமான பாபரி பள்ளியினை மீட்க வேண்டி நாளை (06-12-2012) அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துணைத் தலைவர் முஹம்மது முனீர் தெரிவித்தார்.

 

Dec 4, 2012

டிஸம்பர் 6 அன்று திருப்பூரில் இதஜவின் முற்றுகைப் போர்!


இதஜ தலைவர் S.M.பாக்கர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம்!


மறக்க முடியுமா டிஸம்பர் 6ஆயை..........

அழைக்கிறது..........நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.....

டிஸம்பர் 6அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளார் விபரம்...

அஸ்லாமு அழைக்கும் 

விழித்து இருக்கும் நேர மெல்லாம் வீறு கொண்டு மார்க்கப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக டிஸம்பர் 6அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளார் விபரம்... 


Dec 2, 2012

திருப்பூர் மாவட்ட இதஜவின் ஆலோசனைக் கூட்டம்!


 திருப்பூர் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டம் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது.

அப்பாவி அபூதாஹீர் விடுதலைக்காக கோவை மாவட்ட ஆட்சியரை அனைத்து அமைப்பினரும் சந்திப்பு!


கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசியை அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய ! கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி அபுதாகிர், த.பெ. இப்ராஹிம் தண்டனை எண் 1478. என்பவர் SLE எனும் கொடூர நோயின் பாதிப்பால் இரு சிறுநீரகமும் முற்றாக இழந்து இனி 'டயாலிசிஸ்' மேற்கொண்டால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இருதயமும், பார்வையும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

கோவை சிறைவாசி அபூதாஹீரின் விடுதலைக்கான கவன ஈர்ப்பு போராட்டம்!

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து உயிருக்கு போராடிவரும் சிறைவாசி சகோதரர் அபுதாகிர்... நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகிவருகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன. கண்பார்வை வேகமாக குறைந்துவருகிறது... வலதுகால் மூட்டுக்கு கீழ் கொப்புளங்கள் இரத்தமும் சீளுமாக அவருக்கு மிகுந்த வேதனையை தருகிறது. 

Dec 1, 2012

டிஸம்பர் 6-ல் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அல்லாஹ்வின் ஆலயம் சங்பரிவார் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு (டிஸம்பர் 6, 1992) 20 வருடம் ஆவதை நினைவு கொள்ளும் முறையில் வரும் டிஸம்பர் 6 அன்று தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.


 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலாளர் குடந்தை ஜாஃபர் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கோவை ஜஃபர் கண்டன உரையாற்றுகிறார்.

பாலஸ்தீனம் தனி நாடு - ஐ.நா ஓட்டெடுப்பு வெற்றி.............!!


இறைவன் மிகப்பெரியவன்............!!
 
 ஃபாலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஃபாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்,