Dec 17, 2012

சபரிமலை செல்லும் இந்து பக்தர்களுக்கு சத்தியத்தை நோக்கி அழைக்கும் இதஜ ஆவடி கிளை!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இம்முகாமை INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் துவக்கிவைதார். இதில் 1.இரத்த அழுத்த பரிசோதனை (B.P) 2.உடனடி சர்க்கரை அளவு பரிசோதனை (C.B.G) 3.காது, மூக்கு, தொண்டை பரிசோதனை (E.N.T) 4.எலும்பு தோய்வு பரிசோதனை (B.M.D) 5.உடல் பருமன் எடை பரிசோதனை (B.M.I) 6.நீரிழிவு நிபுணர்கள் ஆலோசனை (DIABETOLOGIST) 7.எழும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை ஆகிய ஏழு வகை மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. 

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக எக்களத்தையும் தாஃவா களமாக மாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முகாம் நடந்த இடத்திற்கு வெளியில் ஒரு அமர்வை ஏற்படுத்தி முஸ்லிம் அல்லாத மக்களுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தை விளக்கும் கை பிரதியையும் இலவசமாக வழங்கி இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுத்தது. 

அங்கு வந்த பல முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் திருமறை குர்ஆனை விரும்பி கேட்டு வாங்கிதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு இது வரை யாரும் இஸ்லாத்தை இப்படி அறிமுக படித்தியதுமில்லை, உங்களுடைய குர்ஆனை தாருங்கள் என்று கேட்கும் பொழுது கூட தருகிறேன் என்று யாரும் சொன்னதுமில்லை என்று அவர்கள் சொல்லும் போது நம்முடை கண்கள் கலங்கியது. 

இது வரை நம்முடைய சமுதாயம் எவ்வளவு பெரிய அறியாமையில் இருந்து வந்துள்ளது என்பதை அறிந்த நாம் இந்த மக்களிடத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களுடைய அறியாமையும் விளக்கி குர்ஆன் என்பது உலக பொதுமறையும், நேர்வழி காடியுமாகும் என்பதை ஆவடி கிளை செயலாளர் அன்சாரி விளக்கினார். 

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்முகாமிற்கு வந்த அந்தனை மக்களுக்கும் உடல் ஆரோக்கியத்தையும், நேர்வழியையும் வழங்க நாம் அனைவரும் இரு கரங்களையும் உயர்தி பிரார்த்திப்போம். (இன்ஷா அல்லாஹ்) எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுன்கே!

No comments: