Dec 14, 2012

என் தொப்புள் கொடி உறவுகளே! தேவேந்திர மக்களை அழைத்த பாக்கர்! நெகிழ்ச்சியில் ஜான் பாண்டியன்!

கடந்த 13ந் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்,முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் அக்கட்சியின் சார்பில் திருப்புமுனை என்கிற மாத இதழ் துவக்க நிகழ்ச்சியும் இடம் பெற்றது.திருப்புமுனையை வரவேற்கிறேன். இது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக மட்டும் இல்லாமல்.கட்சிப்பத்திரிகை என்ற நிலையையும் தாண்டி பரந்து பட்ட களத்தில் அது இயங்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் சகோ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு வைக்கிறேன்.


இந்த நிகழ்ச்சியில்,அக்கட்சியின் பொது செயலாளர் பிரிசில்லா பாண்டியன், மனநல சிகிச்சை மருத்துவர்.டாக்டர் .அப்துல்லாஹ்...,இந்திய த்வ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணை தலைவர் முஹம்மது முனீர்,முன்னாள் மாவட்ட நீதிபதி கலிய பெருமாள்,தமிழ் சங்கம் புலவர் வெற்றி அழகன்,தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பேரவையின் எஸ்.நடராசன்,செவந்தி பொற்செழியன்,மூத்த பதிரிகையார் நெல்லை அசரியா,மாலத்தீவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அப்துல் சமத்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நானும் கலந்து கொண்டேன்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.எம் பக்கர்,மற்றும் டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோர் தமது சிறப்புரையில்..''.சாதி அமைப்பையும்,அது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் விளக்கி உணர்சிகரமான பேசினார். ''சாதியை வேரோடு ஒழித்தது இஸ்லாம்.கடந்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தேவேந்திரகுல பள்ளர் இன மக்கள் சமத்துவமாக வாழ்வதை சுட்டிக்காட்டினார். இங்கு வந்திருக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் எங்களது தொப்புள் கொடி உறவுகளே! ""என்று கூறிய பாக்கர்,அந்த சமூகத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் வரலாற்று ரீதியான உறவுகளை விளக்கினார்.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,மது ஒழிப்பை கொள்கையாக எடுத்திருப்பதை பாராட்டிய அவர்,இஸ்லாம் மதுவை தடை செய்கிறது...அதனால் மட்டும் இதை நான் வரவேற்க வில்லை.ஏன் தொப்புள் கொடி உறவு நீ வாழ வேண்டும்.மதுவில் சிக்கி சீரழிந்து விடக்கூடாது.

அரசியல் வாதிகள் சாதியை சொல்லி பிரிக்கிறார்கள் அவர்களை இனம் காண வேண்டும்.சாதியை இல்லாமல் ஆக்குவதாக சொல்லி அதை வளர்ப்பவர்கள் அரசியல் வாதிகள் தான்.கூலிங் கிளாஸ் போட்டு, பேன்ட் போட்டு வன்னிய பெண்களை அவர்கள் கவர்ந்து செல்கிறார்கள் என்று தருமபுரி சம்பவத்தை வைத்து பேசுகிறீர்களே...வெட்கமாக இல்லை...?கூலிங் கிளாசுக்கும்,பேன்ட்டுக்கும் மா ஆசைப்படுகிறார்கள் வன்னிய பெண்கள்?இது ஏன் வன்னிய சகோதரிகளை,பெண் இனத்தை அவமானப் படுத்துவது இல்லையா?அப்படியல்ல... கோவணம் கட்டியவன் பேண்ட் போடுவதா?கூலிங் கிளாஸ் போடுவதா என்கிற சாதியத்தின் வெளிப்பாடல்லவா இது?"' என்றெல்லாம் நீண்ட உரை நிகழ்த்தினார்.

டாக்டர்.அப்துல்லாஹ் @பெரியார்தாசன் பேசுகையில்....பாக்கர் பேசும் போது எடுத்த எடுப்பிலேயே என்னுடைய தொப்புள் கொடி உறவு என்று சொன்னார்.அது சத்தியமான உண்மை.இறை நம்பிக்கை இருப்பதால் நான் இன்று அப்துல்லாஹ்.இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன் நான் அத்வானியை வெறுத்தேன்.எதிரியாகப் பார்த்தேன்.உலக நல்லுரை திருக்குரானை நான் ஏற்றுக்கொண்ட பின்னர் தான் சமத்துவம் என்ன என்று எனக்கு தெரிந்தது.இப்போது அத்வானி என் சகோதரர் என்று புரிகிறது.யார் எந்த சாதி என்று யார் கண்டு பிடித்தது.
இரத்த பரிசோதனை மூலம் சாதியை கண்டு பிடிக்க முடியுமா? டி.என்.ஏ மூலம் சாதியை கண்டறிய முடியுமா?யூரின் டெஸ்ட் மூலம் கண்டறிய முடியுமா?
நாத்திகர்களும்,விஞ்ஞானிகளும் முதல் உயிர் அமீபா விலிருந்து தோன்றியது என்கிறார்கள்...ஆன்மீக வாதிகள் இறைவன் மனிதனை படைத்தான் என்கிறார்கள்.

அமீபாவிலிருந்து மனிதன் உருவானான் என்றால் முதல் அமீபா முதலியார் அமீபாவா ?அடுத்த அமீபா தேவர் அமீபாவா? இறைவன் தான் மனிதனை படைத்தான் என்றால் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வேறுபாடுகளுடன் படைத்திருப்பானா?
320 பக்கங்களில் பெரியாரின் கருத்துக்களை ஆய்வு செய்திருக்கிறேன்.எல்லா தமிழர்களும் இஸ்லாத்திற்கு மாறுங்கள் சமத்துவம் ஏற்பட்டு விடும் என்றார் பெரியார்.பெரியாரின் இந்த தொகுப்புகளை டி.வி.டி யாக தயாரித்திருக்கிறேன்.
சாதியை ஒழிக்க வேண்டும்.தமிழனாக தலை நிமிர வேண்டும்.நான் மனநலம் படித்திருக்கிறேன் அதை ஒட்டி தான் ஏன் பேச்சு அமையும்.சாதி எனபது மனச் சிதைவு.நம் உடலில் ஏற்படும் சுளுக்கை போல மனதில் ஏற்படும் சுளுக்கு தான் சாதி.அந்த சுளுக்கை எடுக்க வேண்டும்.அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் '' என அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார்.

ஏற்புரை நிகழ்த்திய ஜான் பாண்டியன்,

''ஏன் சமூகம் ஒடுக்கப்பட்ட போது நான் சாதி வெறியனாக திகழ்ந்தேன்.அது மலை ஏறிவிட்டது.இப்போது தமிழனாக தலை நிமிரவேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.அப்படி உணர்ந்ததால் தான் இந்த முயற்சி.அரசியலில் சாதி தீ,ஆட்சியாளர்களிடத்தில் சதித் தீ...அது ஒழிந்தால் தான் தமிழன் தலை நிமிர முடியும். தொப்புள் கொடி உறவு என்று சொன்னார் பாக்கர்.இஸ்லாமியர்களும்,ஒடுக்கப்பட்டவர்களும் ஒன்றிணைய வேண்டும்.சாதி உணர்வுகள் அற்று தமிழர்களாக,ஒரு தாய் மக்களாக ஒன்று பட்டால் தமிழகம் முன்னேறும்.இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது,சகோதரத்துவத்தை போதிக்கிறது.ஆனால் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக உலகில் சித்தரிக்கிறார்கள். இந்தியாவில் இந்துத்தவா வெறியர்கள் தீவிரவாதம் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போடுகிறார்கள் அது தப்பில்லையா? தமிழ் மக்கள் ஒன்று பட வேண்டும்.அதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும்'' என்றார்.

பலர் தங்களது உரையில்...சாதி அமைப்புகளை திரட்டி சாதியை வளர்க்க,சாதி ஒழிந்து போகாமல் பாதுக்காக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் டாக்டர் ராமதாசையும்,காடு வெட்டி குருவையும் ஒரு பிடி அல்ல...பல பிடி பிடித்தனர்.
 
-அபூ ஃபைஸல்.

No comments: