Dec 25, 2012

ஆவடி இதஜ சார்பில் தர்பியா முகாம்!

இந்திய தவ்ஹீத் தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக மாபெரும் தர்பியா பயிற்சி முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் கலந்து கொண்டு முதலில் தொழுகையின் அவசியத்தை பற்றிக் கூறி, பிறகு செய்முறை விளக்கங்களாக உழு செய்தல், தொழுகை முறை, துவா மனனம் போன்ற பயிற்சிகளை அளித்தார். ஆவடி பகுதிவாழ் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதுடன், நாங்கள் இது நாள் வரை செய்து வந்த உழு, தொழுகை செயல் முறைகளில் இவ்வளவு தவறுகள் இருகிறது என்று இப்போது தான் அறிந்து கொண்டோம். ஆகையால் இது போன்ற பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடந்தும் படி கோரிக்கை வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

-இப்னு ஸுலைமான்.

No comments: