இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் எண்ணற்ற
தஃவா பணிகள், தன்னலம் பாராத சமுதாய பணிகள், வீரிய மிக்க போராட்டங்கள்
மற்றும் பாதிக்க பட்ட மக்கள் யாராக இருந்தாலும், எந்த அமைப்பை
சார்ந்தவர்களாக இருந்தாலும் ஓடோடிச் சென்று களப்பணியாற்றும் செயல்பாடுகளால்
ஈர்க்கப்பட்ட எண்ணற்ற மக்களின் ஆதரவு பெற்ற முதன்மை அமைப்பாக அல்லாஹ்வின்
உதவியால் INTJ விளங்குகிறது.
இதன் காரணமாக
பல அமைப்பை சார்ந்த சகோதரர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து பணியாற்ற
விருப்பம் தெரிவித்து இதஜ வின் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளை தொடர்பு
கொண்டு இணைந்தும் வருகின்றனர்.இது போன்றதொரு இணைப்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் மாவட்ட பொருளாளர் கோதர் பாவா முன்னிலையில் பல்வேறு அமைப்பை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞ்சர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
-இப்னு ஸுலைமான்.
No comments:
Post a Comment