Jan 24, 2013

டேம் 999த்திற்கான படத்திற்கான தடை நீடிக்கிறது! உச்ச நீதிமன்றத்தின் தீர்பை இதஜ வரவேற்றது!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

பத்திரிக்கை அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டேம் 999 படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுத்து இன்று (24-1-13) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.
மத துவேஷத்தை தூண்டும் வகையில் கமலஹாசன் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் டேம் 999 திரைப்படம் குறித்து அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

திரைப்படம் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளது பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.

சென்னை உயர் நீதிமன்றம் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது தான் முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


இப்படிக்கு
செய்யது இக்பால்
மாநிலபொதுச்செயலாளர்

No comments: