Dec 2, 2012

அப்பாவி அபூதாஹீர் விடுதலைக்காக கோவை மாவட்ட ஆட்சியரை அனைத்து அமைப்பினரும் சந்திப்பு!


கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசியை அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய ! கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி அபுதாகிர், த.பெ. இப்ராஹிம் தண்டனை எண் 1478. என்பவர் SLE எனும் கொடூர நோயின் பாதிப்பால் இரு சிறுநீரகமும் முற்றாக இழந்து இனி 'டயாலிசிஸ்' மேற்கொண்டால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இருதயமும், பார்வையும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.


எனவே தாங்கள் சிறைவாசியின் நிலையை மனிதாபிமானத்தோடு பரிசீலனை செய்து சிறை நடைமுறை நூல் தொகுதி 2 விதி எண் 632 மற்றும் 633 இன் படி உடனடியாக விடுதலை செய்திட பரிந்துரைத்திடஉ ம்.அதுவரை பரோலில் விடுதலை செய்ய ஆவண செய்திட வேண்டி.

முஸ்லிம் லீக் -I U M L - சார்பாக மாவட்ட செயலாளர் P.முஹம்மது பஷீர், M.S.முஹம்மது ரபிக் Ex MC, தமுமுக சார்பாக மாவட்ட தலைவர் அகமது கபீர், மாவட்ட செயலாளர் கவுன்சிலர் சாதிக் அலி,மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான், பாப்புலர் ஃபிரண்ட ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் இபுராஹீம் பாதுஸா, சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் கோவை தங்கப்பா, சம்சுத்தீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் உமர் ஃபாருக். ஆகியவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்தனர்.
 
-கோவை தங்கப்பா.

No comments: