Dec 25, 2012

எளிமையான தஃவா களத்தில் குன்றத்தூர் இதஜ!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்த படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மாத்திரமே மார்க்கத்தை சொல்லி தஃவா பணிகளை செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி எளிமையான முறையுலும், என்றும் தொடரும் வகையிலும் பல வழிமுறைகளில் தஃவா பணிகளை செய்து காட்டி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே!
வெள்ளிக்கிழமை (21-12-12) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக மாவட்ட தலைவர் ஹனீஃப் தலைமையில் மணஞ்சேரி மற்றும் ஆண்டிக்குப்பம் என்ற முஸ்லிமல்லாத மக்கள் நிறைந்து வாழும் சேரி பகுதிகளில் எளிமையான முறையில் அவர்கள் உள்ளத்தில் பதியும் வகையில் மெகா போன் என்ற ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரம் மற்றும் தனிநபர் சந்திப்பின் மூலமும் தஃவா செய்தது. இம் முறையில் நாம் இஸ்லாத்தை சொல்லி அறிமுக படுத்தியது அம்மக்களை வெகுவாக கவர்ந்தது. 
பல முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகள் பாய்மார்கள் இப்படி சேரி பகுதிகளுக்கு வருவீர்களா? எங்களை உங்கள் சகோதர, சகோதரிகள் என்கிறீர்களே அது எப்படி? உங்கள் அல்லாஹ் சாமியை வணங்குவது எப்படி? முஹம்மது என்று நபர் யார்? இப்படி பல கேள்விகளை கேட்டு இஸ்லாத்தை ஆர்வத்தோடு கேட்டது நமக்கு பல ஆயிரங்களை செலவளிது பல்லாயிரக்கணக்கான மக்களை கூட்டி, பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கூட கிடைக்காத மனநிறைவை தந்தது. எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அம்மக்கள் அனைவருக்கும் நேர்வழியை காட்டி சொர்கத்திற்குரியவர்களாக மாற்றுவானாக! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...
-இப்னு ஸுலைமான்.

No comments: