Dec 25, 2012

இஸ்லாமிய அழைப்புப் பணியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

தாஃவா களத்தில் தனி முத்திரையுடன் விளங்கும் இந்தியதவ்ஹித் ஜமாஅத் பல சகோதர சமுதயாதினரை மாபெரும் அல்லாஹ்வின் கிருபையால் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகிறது.
அதில் எண்ணற்றோர் தங்கள் வாழ்வியல் நெறியாக இந்த மார்க்கத்தை ஏற்று கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் வசிக்கும் பிரபு என்ற சகோதரர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்று நம் சகோதரர்களிடம் தெரிவித்த உடன் அவரை மாவட்ட அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவருக்கு தூய இஸ்லாத்தின் வழிமுறைகள் பற்றி மாவட்ட தலைவர் ஹைதர் அலி அவர்கள் எடுத்து சொல்லி விளக்கம் அளித்தார். மேலும் சில விசயங்களை அவர் தெரிந்து கொள்வதற்காகக் ஓரு மாத பயிற்சிக்கு சென்னை தலைமை அலுவலக்கதுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாநில செயலார் ஃபிருதொவ்ஸ் கலிமா சொல்லி கொடுத்து,  பிரபு என்ற அவர் பெயரை உவைஸ் அஜ்மான் என்று மாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!
-திருப்பூர் யாசிர் அரஃபாத்.

No comments: