கடந்த டிஸம்பர் 6 அன்று, பாப்ரி மஸ்ஜித்
இடிப்பைக் கண்டித்தும், இடித்தவர்களை கைது செய்யக் கோரியும், பாப்ரி மஸ்ஜித்
நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் தமிழகமெங்கும் இந்திய தவ்ஹீத்
ஜமாஅத் சார்பில் வீரியமான போராட்டங்கள் நடத்தப் பட்டன. ஐஎன்.டி.ஜே.வின் மாநில நிர்வாகிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆர்பாட்டத்திற்கு தலைமை ஏற்றனர்.
கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐ.என்.டி.ஜே வின் மாநில துணை பொது செயலாளர் எஸ்.எம் சையது இக்பால், ஆர்ப்பாட்டத்திற்கு பின் அங்கு குப்புசாமி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரர் அபுதாஹிரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் அபுத்தாஹிரின் உடல்நிலையை
குறித்து கேட்டறிந்தார்.சகோதரர் அபுதாகிர் பூரண உடல் நலம் பெற ஏக இறைவனை
இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment