மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் மகத்தான முழக்கத்துடன் மாற்று
மத மக்களுக்கு இறை வேதத்தை இலவசமாக வழங்கி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நேற்று சர்ச்சைக்குரிய துப்பாக்கி படம் குறித்த
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தப் படக் குழுவினருக்கு திருமறை தமிழாக்கம் வழங்கியது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தப் படக் குழுவினருக்கு திருமறை தமிழாக்கம் வழங்கியது.
| இயக்குநர் சந்திரசேகருக்கு அல்குர்ஆனை இதஜ மாநிலத் துணைத் தலைவர் முனீர் வழங்குகிறார். அருகில் தமுமுக பொதுச் செயலாளர் அப்துஸ் ஸமது மற்றும் இதஜ மருத்துவ அணிச் செயலாளர் கலீல் ரஹ்மான். |
விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகருக்கு இந்திய தவ்ஹீத்
ஜமாத்தின் துணைத் தலைவர் முஹம்மத் முனீர் திருமறை தமிழாக்கத்தை வழங்கி
'இதைப் படியுங்கள், இதில் உள்ள போதனைகளைப் பின்பற்றும் ஒருவன்
பயங்கரவாதியாக இருக்க முடியாது, இதில் இருந்து இஸ்லாத்தை பாருங்கள்' எனக்
கூறிய கண்டிப்பாக படிப்பேன்! காயம்பட்ட முஸ்லிம்களுக்கு மனதுக்கு
மருந்திடும் விதமாக எனது அடுத்த படத்தை எடுப்பேன் என்றும் கூறினார்.
அல்ஹம்து லில்லாஹ்.
அருகில் தமுமுக தலைவர் அப்துல் சமத் மற்றும் தென்
சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ அணி செயலாளர் கலீல்ரஹ்மான்
No comments:
Post a Comment