Nov 4, 2012

நரேந்திரமோடி ஒரு குரங்கு - மகளிர் ஆணையத்தலைவி கடும் தாக்கு..............!!


குரங்குக்கு தெரியுமா இஞ்சியின் மகிமை என்று, நரேந்திரமோடியை காட்டமாக சாடியுள்ளார், தேசிய மகளிர் ஆணையத்தலைவி பிர்காசிங், மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசிவரும், நரேந்திரமோடி மன்னிப்பு கேட்கும்வரை விடப்போதில்லை என்கிறார் அவர்,

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவை 50 கோடி ரூபாய் காதலி என்று, கொச்சைப்படுத்தி பேசிய நரேந்திரமோடி பலரது கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார்,

திருமணம் செய்துக்கொள்ளாத பிரமச்சாரி என்று சொல்லிக்கொள்ளும் நரேந்திர மோடி, யசோதா என்ற பெண்ணை 1968ல் திருமணம் செய்து எமாற்றியுள்ளார் என்பது, இப்போது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் அமைச்சரின் மனைவி குறித்து அவர் பேசியதை, காங்கிரஸ் கட்சிக்கு அப்பால், பலரும் கண்டித்து வருகின்றனர். தற்போது தேசிய மகளிர் ஆணையத்தலைவி, தனது கண்டனத்தை கவிதை மூலம் தெரிவித்துள்ளார்....

விரோதங்களை வளர்க்கும் துர்பாக்கியசாலிக்கு உறவுகளின் அருமை தெரியாது. அன்பை பணத்தால் எடை போடும் குரங்குக்கு இஞ்சியின் மகிமை தெரியாது என்று மோடியை குரங்குடன் ஒப்பிட்டு வர்ணித்துள்ளார்,

மேலும் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிய அவர், மோடி மன்னிப்பு கேட்காவிட்டால், இந்த பிரச்சினையை குஜராத் பெண்களிடம் எடுத்துச்சென்று கடும் போராட்டத்தில் குதிப்போம், என்று எச்சரித்துள்ளார்,

கடந்த சில மாதங்களுக்கு முன், இந்திய பெண்களின் ஊட்டச்சத்து குறைவிற்கு, பெண்கள் தங்கள் அழகை பேணுவது தான் காரணம், என்று கிண்டளித்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

-தகவல் : சங்கை ரிதுவான்.

No comments: