Nov 1, 2012

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மர்யம் ஜமீலா வஃபாத்தானார்!


சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா இன்று (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் இன்று காலமானார்.

மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். மர்மடுகே பிக்தாலால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் தாம் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.

-தகவல் :ஃபெரோஸ்கான்

No comments: