இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் கூறியதாவது,
இஸ்லாமிய
மார்க்கத்திற்கு விரோதமாக செய்வினை,சூனியம், என்ற பெயரிலும்
,ஆன்மீக மருத்துவம் என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசமாக பேசியது,பொது
மக்களை ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களை
செய்ததாக கூறப்படும் இவரை ஜாமீனில் வெளி வர விடாமல் அரசாங்கம்
தடுக்க வேண்டும்.மேலும் இவரை ஜாமீன் பெற முடியாத வகையில் குண்டர்
தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சமூக ஆர்வலர் முஜீப் கூறுகையில்,
இவரின் ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டதாக கேள்விபட்டேன்.இவர் ஜாமீனில் வெளியே வந்தால் இன்னும் பல அக்கிரமங்களை செய்வார் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும்.நல்லவர் போல் நடித்து மிக வக்கிரமாக செயல்பட்ட இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment