கடந்த 8 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கடும் தாக்குத்தலால் பாலஸ்தீன காஸாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவில் வெடித்த பஸ் குண்டு வெடிப்பில் 25க்கும் அதிகமான யூதர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த போர்
நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் தீவிர
முயற்சிகள் எடுத்து வந்தன, இதற்காக எகிப்து தலைநகர் கெய்ரேவில் இஸ்ரேல்
மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து
வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ஹிலாரி கிளிண்டன் மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர் மொகமது கமல் அமர்
ஆகியோர் கூட்டாக சேர்ந்து கெய்ரோவில் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது
இஸ்ரேலின் விமான தாக்குதலும், காசா இயக்கத்தினரின் ராக்கெட் தாக்குதலும்
நேற்று இரவு 9 மணியுடன் நிறுத்தப்படுகிறது என்று அவர்கள் கூட்டாக
அறிவித்தனர்.
இதன்மூலம் ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த தீவிர சண்டை முடிவுக்கு வந்தது. இதனால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய மக்கள் நிம்மதி அடைந்தனர்.
-சங்கை ரிதுவான்.
No comments:
Post a Comment