Nov 5, 2012

திருப்பூரில் இதஜ சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் நிகழ்ச்சி!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருப்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடை பெற்றது மாவட்ட தலைவர் ஹைதர் அலி அவர்களின் தலைமை உரையுடன் மிகச் சிறப்பாக துவங்கியது.
 இதில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா அவர்கள் 'நன்மையை ஏவி தீமையை தடுப்போம்' எனும் தலைப்பிலும் மாநிலத் துணைத்தலைவர் முஹம்மத் முனிர் 'இட ஒதுக்கீட்டில் ஏமாற்றி வரும் மத்திய மாநில அரசுகள்' எனும் தலைப்பிலும் பொது செயலாளர் செங்கிஸ்கான் 'இன்றைய பிரச்சனைகளுக்கு என்றோ தீர்வு சொன்ன இஸ்லாம்' எனும் தலைப்பிலும் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'உலக முஸ்லிம்களும் எதிர் கொள்ளும் சவால்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேங்கை இப்ராகிம் அவர்கள் 'எனது பார்வையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருக்கைகளைத் தாண்டி ஏராளமானோர் வீதிகளில் நின்று இந்த உரைகளைக் கவனித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

நிகழச்சிகளை மிகச் சிறப்பாக மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

No comments: