Nov 17, 2012

பைத்துல் முகத்தஸ் இமாமுக்கு விசா மறுத்தது இந்தியா.............!! காவி அரசாக மாறியது காங்கிரஸ் அரசு............!!

முஸ்லிம்களின் எதிர்ப்பை மீறி, இஸ்ரேலுடன் உறவை வைத்துள்ள இந்திய அரசு நேற்று இந்தியா வரவிருந்த பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் இமாம் ஷேக் ஷியாம் அவர்களுக்கு விசா வழங்க மறுத்து விட்டது.


ஆஸம்கர் நகரின் ஜாமியதுல் பலாஹ் மதரஸாவின் பொன்விழா ஆண்டு துவக்க நிகழ்ச்சிக்கு வரவிருந்த ஷேக் சியாம் அவர்களுக்கு கடைசி நேரத்தில் விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டது,

நிகழ்ச்சி நிரலின் படி நேற்றைய ஜும்ஆ தொழுகையை அக்ஸா பள்ளிவாசலின் இமாம் அவர்கள் தொழவைப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது,

இதற்காக ஏமன் நாட்டிலிருந்த இமாம் தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் விசாவுக்காக முறைப்படி மனு செய்திருந்தார்,

கண்டிப்பாக விசா கிடைத்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விசா மறுக்கப்பட்டுள்ளது முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

ஷேக் ஷியாம் இதற்கு முன்பு பலமுறை இந்தியா வருகை தந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி சென்றவர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்,

இந்திய விசா மறுக்கப்பட்ட நிலையில் ஷேக் சியாம் அனுப்பியுள்ள செய்தியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக பெரிதும் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

-அபிரை அபூ.

No comments: