இறைச்சியோடு இறைச் செய்தியும் வீடு வீடாக விநியோகித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!
எங்கும் தஃவா எதிலும் தஃவா எனும் முழக்கத்துடன் கிடைக்கின்ற
அனைத்து வாய்ப்புகளையும் அழைப்புப் பணிக்கான களங்களாக்கி செயல்படும்
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளை குர்பானி கறியின் மூலம் தனது
தஃவாவை முஸ்லிமல்லாத மக்களிடம் செய்தது.
மாநில பொதுக் செயலளர்
செங்கிஸ் கான் மற்றும் மாநில செயலளர் அப்துல் ஹமித் ஆகியோர் தலைமையில்
சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் கொண்ட குழுசென்னை
பல்கலைக் கழகத்திற்கு பின் உள்ள கூவம் வாய்க்காலை ஒட்டிய குடிசைப்
பகுதிகளுக்கு சென்று, அவர்களுக்கு கறியை விநியோகித்ததுடன் இஸ்லாத்தை
எடுத்து சொன்னது. மற்ற பண்டிகைகளுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள
வித்தியாசத்தை எடுத்து சொல்லி இறைவனைத் தொழுதலும் ஏழைகளுக்கு உதவுதலும்
தான் இஸ்லாம் கூறும் பண்டிகை. பண்டிகைகளின் பெயரால் வெடித்தலும்,
குடித்தலும் வீண் விரயம் என்று எடுத்துக் கூறியதோடு அல்லாஹ்வைப் பற்றியும்
அவனது தூதரைப் பற்றியும் எடுத்துக் கூறி அழைப்பு பனி செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment