Oct 29, 2012

ஹஜ் பெருநாளில் பாக்கரின் எழுச்சி உரை!

கடந்த 27.10.12 சனிக்கிழமையன்று தமிழகத்தில் ஹஜ் பெருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பல இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தேசிய தலைவர் ''எஸ் எம் பாக்கர் '' தலைமையில் நடைபெற்ற தியாகத்திருநாள் தொழுகையில் அவர் எழுச்சிமிகு உரை ஒன்றை ஆற்றினார். 

அவ்வுரையின் பொழுது “படைத்தவனின் கருணையால் பல தடைகளை தாண்டி மார்க்க பணிகளிலும் சமுதாய பணிகளிலும் எம் பெருமானார் ஸல் அவர்கள் காட்டித்தந்த வழியில் சத்தியத்தில் உறுதியாகவும் சமுகத்தில் இணக்கமாகவும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளால் மக்கள் கவரப்பட்டு பல நிகழ்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் அதே சமயம் தங்களை இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைத்தும் கொள்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில் தியாகத்திருநாள் தினத்தன்று மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட திருவல்லிக்கேணி திடல் தொழுகை புகழ் அனைத்தும் படைத்தவனையே சேரும் ....”

-திப்பு சுல்தான்.

No comments: