Jan 30, 2013

5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி இதஜவின் சார்பில் நீதி கேட்டு நெடும் பயணம் துவங்கியது!

இறையருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டபடி, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும்,ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கவேண்டும்,கட்டாயத் திருமண பதிவு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி முஹல்லா ஜமாத்துகளின் பதிவை அப்படியே அங்கீகரிக்க வேண்டும்,ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வக்ப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து நீதி கேட்டு நெடும் பயணத்தை இன்று 12 மணியளவில் துவக்கி இருக்கிறது.
இந்த நீதி கேட்டு நெடும் பயணம் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகிலிருந்து சிறப்பான துவக்கத்துடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் இந்திய மக்கள் கட்சியின் தலைவர் தேவநாதன்,அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி,ஆர்.கே.முஹைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி நீதி கேட்டு நெடும் பயண நிகழ்ச்சியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹைதீன் ஐந்து கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.

"விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சையினால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் - மேல் முறையீட்டு வழக்கின் மூலம் விஸ்வரூபத்திற்கு தடை நீடிக்கப்பட்டால் நீதி கேட்டு நெடும் பயணம் தொடரும் என்றும், தடை நீக்கப்படுமேயானால் நெடும் பயணம் கண்டன ஆர்ப்பாட்டங்களாக மாற்றப்படும்..." என்றும் தெரிவித்து விட்டு, நீதி கேட்டு நெடும் பயணத்திற்கு தலைமையற்று புறப்பட்டார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர்எஸ்.எம். பாக்கர். தொண்டியப்பா, முஹம்மது முனீர், முஹம்மது ஸித்தீக், ஃபிர்தவ்ஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் உடன் உள்ளனர்.

-மூஸா ராஜூ.

No comments: