Oct 24, 2012

இதஜ மயிலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் நம்முடைய சகோதரர்களின் தஃவா வினாலும் ஏராளமானோர் இந்த தீனுல் இஸ்லாம்  மட்டுமே இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்பதை உணர்ந்து     இந்த சத்திய மார்கத்தின் பக்கம் வருகிறாகள்.

கடந்த இருவாரங்களில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மூலம் ஐவர் இஸ்லாத்தை   ஏற்றுள்ளனர். அந்த வகையில் சென்னை மைலாப்பூரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் அவர்கள்  மீரான் முஹம்மது ஆக தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

 சூளைமேடு அல்புர்கான் ஜுமுஆ மர்கஸில் சகோதரர் தப்ரேஸ் அவர்கள் திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்க, மயிலை கிளை துணைத் தலைவர் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தை வழங்கினார்.அல்ஹ்ம்துலில்லாஹ்!

No comments: